வால்பாறையில் உணவகங்களில் அதிரடி சோதனை


வால்பாறையில் உணவகங்களில் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 21 Sept 2023 12:30 AM IST (Updated: 21 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் ‘சவர்மா’ சாப்பிட்ட மாணவி இறந்ததை தொடர்ந்து வால்பாறையில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

கோயம்புத்தூர்

வால்பாறை


நாமக்கல்லில் 'சவர்மா' சாப்பிட்ட மாணவி இறந்ததை தொடர்ந்து வால்பாறையில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.


உணவகங்களில் சோதனை


நாமக்கல்லில் தனியார் ஓட்டலில் 'சவர்மா' சாப்பிட்ட பள்ளி மாணவி கலையரசி (வயது 14) பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.


இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு நடந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து வால்பாறையில் நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி காளிமுத்து தலைமையில், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வீரபாகு முன்னிலையில் அதிகாரிகள் உணவகங்களில் சோதனை நடத்தினர்.


கோழி இறைச்சி பறிமுதல்


இந்த ஆய்வின் போது ஓட்டல்களில் கோழி இறைச்சிகள், உணவு பொருட்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.


மேலும் ஓட்டல்களில் உள்ள சமையல் அறை சுகாதார இல்லாமல் இருந்ததும், குடிநீருக்கு பயன்படுத்தும் தண்ணீர் சுகாதார முறையில் வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, அதனை சரிசெய்ய ஓட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


கடும் நடவடிக்கை


இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-


உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவுகளை, சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும். குளிர்சாதன பெட்டியில் வைத்த கோழிஇறைச்சி மற்றும் உணவு பொருட்களை வழங்கக்கூடாது. இதனை ஓட்டல் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.


இதனை மீறுபவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Related Tags :
Next Story