அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணித்த அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தனர்.

கோயம்புத்தூர்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணித்த அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தனர்.

தமிழக அரசின் மாநில பாடல்

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் உத்தரவின்பேரில் மாநகர செயலாளர் இ.மு.சாஜித் தலைமையில் நிர்வாகிகள் நேற்று கோவை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் சமீரனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 17-12-2021 அன்று அறிவித்தார். மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்றும் அரசாணை (எண்.1362) வெளி யிடப்பட்டது.

சட்ட நடவடிக்கை

அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொது அமைப்பு களின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாட வேண்டும்.

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

இது தமிழக அரசின் ஆணையை மீறக்கூடிய விதிமீறல் ஆகும். எனவே அந்த பல்கலைக்கழகத்தின் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story