ஆடு திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


ஆடு திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Oct 2023 4:30 AM IST (Updated: 12 Oct 2023 4:30 AM IST)
t-max-icont-min-icon

ஆடு திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் மனு கொடுத்தனர்.

தேனி

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் நேற்று வந்தனர். அப்போது அவர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், "தேனி மாவட்டத்தில் ஆடுகள் திருடப்படும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் உரிய தீர்வு கிடைப்பது இல்லை. எனவே, ஆடு திருடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடு திருடர்களை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்" என்றனர்.


Next Story