லீலா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


லீலா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

காளியம்மனை அவமதிக்கும் வகையில் ஆவண படம் தயாரித்த லீலா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க.வினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

பா.ஜனதா கட்சியின் ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கஜேந்திரன் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் ராமநாதன், மாரிமுத்து, நகரத் தலைவர் வடிவேலன் ஆகியோர் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் இந்து கடவுளான காளியம்மனை அவமதிக்கும் வகையில் ஆவண படம் தயாரித்த லீலா மணிமேகலை மீது நடவடிக்கை வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story