நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டிடம் மூதாட்டி புகார் கொடுத்தார்.
வெளிப்பாளையம்:
நாகையை அடுத்த சங்கமங்கலம், பழையனூர் மேல்பாதி பகுதியை சேர்ந்த மூதாட்டி ஜெயம் (வயது 70) என்பவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-எனது கணவர் இறந்து விட்டதால் தான் மட்டும் தனியாக வசித்து வருகிறேன். எனது மகள்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த 21-ந் தேதியன்று எனக்கு சொந்தமான நிலம் மற்றும் குளத்தை அபகரித்து அத்துமீறி சிலர் குத்தகைக்கு விட முயன்றனர். நான் சென்றுகேட்டபோது என்னை ஒருவர் தரக்குறைவாக திட்டினார். பின்னர் அவர் எனது வீடு புகுந்து என்னை தாக்க முயன்றார்.இதுதொடர்பாக கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து கடந்த 28-ந்தேதி எனது வீட்டை அடித்து நொறுக்கினர். எனது நிலத்தை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.