சீமான் மீது அவதூறு பரப்பி வரும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-நாம் தமிழர் கட்சியினர் புகார்
சீமான் மீது அவதூறு பரப்பி வரும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர்.
சீமான் மீது அவதூறு பரப்பி வரும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர்.
நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமையில் மாநில பொறுப்பாளர் சுமதிகபிலன், பொருளாளர் திருக்குமரன், தொகுதி செயலாளர்கள் மணிகண்டன், இளங்கோவன், ஸ்டாலின்பிரேம் மற்றும் நிர்வாகிகள் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர். அதில், ''எங்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அரசியலில் அவருடைய வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் சிலர் செயல்படுகின்றனர்.
நடிகை விஜயலட்சுமி மற்றும் வரலட்சுமி ஆகியோர் சில நபர்களுடன் கூட்டுச்சேர்ந்து சதித்திட்டம் தீட்டி அரசியல் உள்நோக்கத்துடன், பிறகட்சிகளின் தூண்டுதலின்பேரில் எவ்வித ஆதாரமும் இன்றி பொய்யாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இருவரும் பணம் பறிக்கும் நோக்கத்துடன் பொய்யான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். இதனால் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்பி வரும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.