போலி டாக்டர்களை ஒழிக்க அதிரடி சோதனை


போலி டாக்டர்களை ஒழிக்க அதிரடி சோதனை
x

திருவாடானை ஆர்.எஸ். மங்கலம் தாலுகாவில் போலி டாக்டர்கள் தொடர்பாக அதிரடி சோதனை நடைபெற்றது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை ஆர்.எஸ். மங்கலம் தாலுகாவில் போலி டாக்டர்கள் தொடர்பாக அதிரடி சோதனை நடைபெற்றது.

அதிரடி சோதனை

திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ், ராமநாதபுரம் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் சசி, திருவாடானை மண்டல துணை தாசில்தார் ராமர், திருவாடானை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் எட்வின் மைக்கேல் மற்றும் அதிகாரிகள் திருவாடானை, தொண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 3 போலி மருத்துவமனைகள் பூட்டப்பட்டு இருந்தது. 4 இடங்களில் நடத்திய சோதனையில் போதிய ஆதாரங்கள் ஏதும் சிக்கவில்லை.

இதுகுறித்து திருவாடனை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ் கூறியதாவது:-

மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் உத்தரவின் பேரில் திருவாடானை ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் போலி டாக்டர்களை ஒழிக்கும் நடவடிக்கையாக ஆங்காங்கே அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற சோதனையில் போதிய ஆவணங்கள் தடயங்கள் ஏதும் சிக்கவில்லை. டாக்டர்கள் அல்லாதவர்கள் பலர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பது தெரிய வந்துள்ளது. இதனை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

தகவல் தெரிவிக்கலாம்

பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடிய மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பயன்படுத்தும் செயலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு சிறுநீரக பாதிப்பு போன்ற பல்வேறு உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற போலி டாக்டர்களை நம்பி அவர்களிடம் சிகிச்சைக்கு செல்லக்கூடாது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பகுதியில் போலி டாக்டர்கள் விரைவில் பிடிபடுவார்கள்.

அங்கீகரிக்கப்பட்ட டாக்டர்கள் அல்லாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க கூடிய நபர்கள் குறித்து பொதுமக்கள் தொலைபேசி மூலமும் நேரிலும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். அப்படி சிகிச்சை அளிக்கும் போலியான நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தவும் ஏற்பாடு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story