அனைத்து அரசு பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற நடவடிக்கை


அனைத்து அரசு பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற நடவடிக்கை
x
தினத்தந்தி 9 Sept 2023 1:00 AM IST (Updated: 9 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

வரும் கல்வி ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி ெபற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு, கலெக்டர் சரயு அறிவுரை வழங்கினார்.

கிருஷ்ணகிரி

வரும் கல்வி ஆண்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி ெபற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு, கலெக்டர் சரயு அறிவுரை வழங்கினார்.

கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மார்ச்-2023 தேர்ச்சி குறித்த பகுப்பாய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்ச்சி விகிதம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 107 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளை சிறப்பு கவனம் செலுத்தி, வரும் கல்வி ஆண்டில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள 25 பள்ளி தலைமை ஆசிரியர் வாட்ஸ்அப் குழு உருவாக்கி தினந்தோறும் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் குறித்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சிறப்பு வகுப்புகள்

மெதுவாக கற்கும் மாணவர்களை கண்டறிந்து சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று தேர்ச்சி குறைவாக உள்ள 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து தேர்வுகள் நடத்த வேண்டும். காலை மற்றும் மாலை நேரங்களில் பாட வாரியாக சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை பெற 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' என்ற திட்டம் அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும். இதன் வாயிலாக சேகரிக்கப்படும். நிதி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிமேகலை (கிருஷ்ணகிரி), கோவிந்தன் (ஓசூர்), மாவட்டத் திட்ட அலுவலர் வடிவேலு, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி தலைமையாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story