அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை


அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை
x

மழைக்காலம் என்பதால் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா தெரிவித்தார்.

திருவாரூர்


மழைக்காலம் என்பதால் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா தெரிவித்தார்.

ஒன்றியக்குழு கூட்டம்

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதி கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி பேசினர்.

பின்னர் ஒன்றியக்குழு தலைவர் கூறியதாவது:-

திருவாரூர் ஒன்றியத்தில் உள்ள பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடங்களை சீரமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். பின்னவாசல், அடியக்கமங்கலம், பழவனக்குடி, புலிவலம் ஆகிய இடங்களில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்து தரப்படும்.

கொசு மருந்து அடிக்க நடவடிக்கை

அங்கன்வாடி கட்டிடங்களில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தி தரப்படும். பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிப்பதற்கும், புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலம் என்பதால் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story