டிரைவர்களின் 'லைசென்சை' ரத்து செய்ய நடவடிக்கை


டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்ய நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் குடிபோதையில் பஸ்களை இயக்கிய டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்ய நடவடிக்ைக எடுத்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி காட்டினர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் குடிபோதையில் பஸ்களை இயக்கிய டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்ய நடவடிக்ைக எடுத்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி காட்டினர்.

திடீர் சோதனை

பொள்ளாச்சி பகுதிகளில் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பஸ்களை டிரைவர்கள் குடிபோதையில் இயக்குவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து பொள்ளாச்சி புதிய, பழைய பஸ் நிலையங்களில் நேற்று காலை 6 மணிக்கு திடீர் சோதனை மேற்கொண்டனர்.

வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், செல்வி, சந்திரசேகர் மற்றும் போலீசார் டிரைவர்கள் குடிபோதையில் உள்ளனரா ? என்று நவீன கருவி மூலம் சோதனை மேற்கொண்டனர். அப்போது 3 டிரைவர்கள் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:-

லைசென்ஸ் ரத்து

பொள்ளாச்சி பகுதியில் இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்களில் சில டிரைவர்கள் குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும் சிலர் பணி முடிந்து வீட்டிற்கு சென்று பிறகு நன்றாக குடித்து, மறுநாள் காலையில் போதையிலேயே பணிக்கு வருகின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பஸ் டிரைவர்களை நம்பி ஒரு பஸ்சில் சுமார் 40 பேர் வரை பயணம் செய்கின்றனர்.

இதன் காரணமாக பஸ் நிலையத்தில் டிரைவர்கள் குடிபோதையில் உள்ளார்களா? என்று சோதனை செய்யப்பட்டது. இதில் 3 டிரைவர்கள் குடிபோதையில் பணிக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை(லைசென்ஸ்) ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதுபோன்று தொடர்ந்து திடீர் சோதனைகள் நடத்தப்படும். தொடர்ந்து குடித்து விட்டு பணிக்கு வந்தால் ஓட்டுனர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story