மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை


மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை
x

சீர்காழி தாடாளன் கோவில் மேற்குவீதியில் மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகரசபை தலைவர் கூறினார்.

மயிலாடுதுறை

சீர்காழி;

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தாடாளன் கோவில் மேற்கு வீதியில் சாலை ஓரம் உள்ள மழைநீர் வடிகால் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் நாகரத்தினம் செந்தில் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகர சபைத் தலைவர் துர்க்கா ராஜசேகரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோரிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து இருவரும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று சேதம் அடைந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகாலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மழைக்காலத்துக்குள் சேதம் அடைந்த மழை நீர் வடிகாலை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். மேலும் மண் சாலையாக உள்ள பாலசுப்ரமணிய நகரில் தார் சாலை அல்லது சிமெண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆய்வின் போது என்ஜினீயர் பாபு, பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன், நகர் மன்ற உறுப்பினர்கள் நாகரத்தினம் செந்தில், பாரூக் மற்றும் பலர் இருந்தனர்.


Next Story