பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை புகழூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்


பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை புகழூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
x

புகழூர் நகராட்சி கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரூர்

நகராட்சி கூட்டம்

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி கூட்டம் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கனிராஜ் வரவேற்றார். கூட்டத்தில் புகழூர் நகராட்சி பகுதிகளில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் 2022-23-ம் நிதிஆண்டின் நிதியின் கீழ் ரூ.1.2 கோடி மதிப்பீட்டில் தெருக்களில் தார்சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளுதல், புகழூர் நகராட்சி பகுதிகளில் ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் தெருக்களில் சிமெண்டு சாலை அமைத்தல், 2023-24-ம் ஆண்டு பொது நிதியின் கீழ் ரூ.29.58 லட்சத்தில் 6, 13, 17-வது வார்டு பகுதிகளில் உள்ள தெருக்களில் தார்சாலை அமைத்தல்.

அடிப்படை தேவைகள்

ரூ.5.70 லட்சம் மதிப்பீட்டில் 2023-24-ம் ஆண்டு பொது நிதியின் கீழ் கந்தசாமிபாளையம் உரக்கிடங்கில் இயற்கை உரம் சலிக்கும் எந்திரம் பொருத்துதல், ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் பகழி மண்டபம் பின்புறம் உள்ள ஆழ்துளை கிணற்றின் அடிபம்பை நீக்கி நீர்த்தேக்க தொட்டி அமைத்து மின்மோட்டார் பொருத்துதல், ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் நந்தவனம் தெருவில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் அடிபம்பை நீக்கி நீர்த்தேக்க தொட்டி அமைத்து மின்மோட்டார் பொருத்துதல்,

ரூ.2.90 லட்சம் மதிப்பீட்டில் மல்லிகை நகர், புதுக்குறுக்குபாளையம் பகுதிகளில் வடிகாலில் தரைமட்ட பாலம் அமைத்தல், ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முதல் அண்ணா நகர் 10-வது தெரு வழியாக கந்தசாமிபாளையம் சாலை வரை பிரதான குழாய் அமைத்தல், ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டில் கொழும்பு ஸ்டோர் முதல் மாரியம்மன் கோவில் வீதி வரை பகிர்மான குழாய் அமைத்தல் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story