அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை


அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

அரகண்டநல்லூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை பேரூராட்சி தலைவர் தகவல்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலராக அருண்குமார் பொறுப்பேற்றார். அவருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ் அன்பு மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் உள்ள அத்தியாவசிய பிரச்சி னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது வார்டு வாரியாக நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது, கூடுதல் நிதி ஆதாரம் தேவைப்படும் நிலையில் அது குறித்த திட்ட அறிக்கையை அமைச்சர் பொன்முடி மற்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பி வைத்து நிதி ஆதாரத்தை பெற்று சரி செய்வது எனவும், வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அரகண்டநல்லூர் பேரூராட்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கீட்டை கேட்டு பெற உள்ளோம் என பேரூராட்சி தலைவர் வக்கீல் ராயல் எஸ் அன்பு தெரிவித்தார். மேலும் இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் அருண்குமார் கூறும்போது, பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக திட்ட அறிக்கையை தயார் செய்து வருகிறோம். அதே நேரத்தில் பேரூராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வரிகளை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லை என்றால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள நோட்டீஸ் வழங்கி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முன்னதாக அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தின் பின்புறம் சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கை குறித்து பேரூராட்சித் தலைவர் வக்கீல் ராயல் எஸ் அன்பு, செயல் அலுவலர் அருண்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது தலைமை எழுத்தர் சுதாகர் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.


Next Story