அனைத்து துறைகளிலும் முதன்மை ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை


அனைத்து துறைகளிலும் முதன்மை ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை
x

அனைத்து துறைகளிலும் முதன்மையான ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் ம.கலைவாணி மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

அனைத்து துறைகளிலும் முதன்மையான ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் ம.கலைவாணி மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

பெரப்பேரி ஊராட்சி

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரப்பேரி ஊராட்சி மன்ற தலைவராக அதே பகுதியை சேர்ந்த ம.கலைவாணி மகாலிங்கம் உள்ளார்.

ஊராட்சியில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

பெரப்பேரி பஜனை கோவில் தெருவில் ரூ.7 லட்சத்து 65 ஆயிரத்தில் சிமெண்டு சாலை, அதே பகுதியில் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்தில் பைப் லைன் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

மகளிர் பொது கழிப்பிடம் ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்திலும், 3 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் உள்ளிட்ட பணிகள் பழுது பார்த்து சீரமைக்கப்பட்டு உள்ளது.

ஊராட்சியில் உள்ள எல்லா தெருக்களிலும் மின் விளக்குகள் மாலை 6 மணிக்கு தொடங்கி காலை 6 மணி வரை எரியும் வகையில் தானியங்கி கருவி பொருத்தப்பட்டு உள்ளது.

மேலும் சொந்த செலவில் பஜனை கோவில் அருகே ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்தில் சிமெண்டு சாலையும், ரூ.1 லட்சத்தில் அனைத்து தெருக்களிலும் மண் கொட்டப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையத்தில் உள்ள கழிப்பிடத்தை ரூ.50 ஆயிரம் செலவில் சீரமைத்து பைப் லைன் அமைக்கப்பட்டு உள்ளது. அரசு நிதியில் இருந்து பெரப்பேரியில் ரூ.12 லட்சத்து 70 ஆயிரத்தில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம், அங்கன்வாடி மையத்திற்கு ரூ.11 லட்சத்து 70 ஆயிரத்தில் புதிய கட்டிடம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

கண்காணிப்பு கேமரா

தனியார் தொழிற்சாலை அருகில் இருந்து குடிநீர் தொட்டி வரை ரூ.4 லட்சத்தில் பைப் லைன், ஏரிக்கரை தெருவில் ரூ.4 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது.

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. 323 பயனாளிகளுக்கு தனிநபர் கழிப்பிடம், 275 பயனாளிகளுக்கு தனிநபர் உறிஞ்சிகுழி வழங்கப்பட்டுள்ளது. ஒரு முறை மருத்துவ முகாம், 2 முறை கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட்டு சிகிச்சை, பரிசோதனை அளிக்கப்பட்டு உள்ளது. ஊராட்சியில் பனை விதைகள் நடப்பட்டுள்ளது. ஊராட்சியில் திருட்டு, சமூக விரோத செயல்கள் நடக்காமல் தடுக்க பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது.

ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பயணிகள் நிழற்குடை, உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானம், சமுதாய கூடம், காரிய மேடை, நெற்களம், குடோனுடன் கூடிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

முதன்மை ஊராட்சியாக...

ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தினமும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊராட்சியில் உள்ள இளைஞர்கள் விளையாட்டு துறையில் ஊக்குவிக்க விளையாட்டு உபகரணங்கள், ஏழை, எளிய மாணவ-மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க கல்வி உபகரணங்கள் வாங்கி கொடுத்து ஊக்குவித்து வருகிறேன்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரப்பேரி ஊராட்சி சுகாதாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்ற முதன்மையான ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நான் தினமும் காலையில் ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் சென்று வார்டு பகுதிகளில் அடிப்படை குறைகள் உள்ளதா? என்றும், மக்கள் தெரிவிக்கும் குறைகளை பொறுமையாக கேட்டு அதை உடனுக்குடன் சரிசெய்து கொடுத்து வருகிறேன். மக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு முன்பாக அந்த குறையை நான் அறிந்து அதை சரிசெய்து கொடுத்து வருகிறேன்.

ஆழ்துளை கிணறுகள்

தடையில்லாமல் குடிநீர் கிடைக்க கூடுதல் ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், குடிநீர் குழாய்கள் இல்லாத பகுதிகளில் புதிய குழாய்கள் அமைக்கவும், மின் விளக்குகள் இல்லாத பகுதியில் புதிய மின் விளக்குகள் பொருத்தவும், பழுதடைந்த மின் விளக்குகளை உடனுக்குடன் மாற்றவும் நடவடிக்கை எடுத்து உள்ளேன்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரப்பேரி ஊராட்சியை அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் தன்னிறைவு பெற்ற முதன்மையான சிறந்த ஊராட்சியாக மாற்ற அமைச்சர் ஆர்.காந்தி, ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ., நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு, துணைத்தலைவர் ச.தீனதயாளன், மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை வெங்கடேசன் ஆகியோரின் ஒத்துழைப்போடு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுமதி ஐயப்பன், வார்டு உறுப்பினர்கள் கே.ராமு குமரேசன், ஏ.பரிமளா அரிகிருஷ்ணன், ஏ.குமார், என்.பெருமாள், கே.அரசு, ஊராட்சி செயலாளர் பி.பாண்டியன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு மாற்றுவேன்.

இவ்வாறு ஊராட்சி மன்ற தலைவர் ம.கலைவாணி மகாலிங்கம் தெரிவித்து உள்ளார்.


Next Story