அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை


அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை
x

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை

மேலூர்,

அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

மேலூரில் அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலையை திறப்பதற்கு முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம், அலங்காநல்லூர் தென்னக கரும்பு விவசாயிகள் மேம்பாட்டு சங்கம் மற்றும் கரும்பு விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒரு போக விவசாய சங்க தலைவர் முருகன், இணை செயலாளர் அசோக்குமார், தென்னக கரும்பு விவசாயி மேம்பாட்டு சங்க செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் செல்லமுத்து, குறிஞ்சி குமரன், வெள்ளலூர் ஊராட்சி மன்ற தலைவர் கவுசிகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க தேவையான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட விவசாயிகளின் நலன் காக்க இந்த ஆண்டு அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவது.

தீர்மானம்

மாதந்தோறும் மாவட்ட அளவில் நடைபெறும் விவசாயிகளின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஏற்கனவே நடைபெற்றதை போலவே மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலே நடத்தவேண்டும். 5 ஏக்கர் புஞ்சை, 10 ஏக்கர் மானாவாரி நிலங்களும், டிராக்டர் வைத்திருந்தும் விவசாயம் செய்ய முடியாமலும், போதிய வருமானம் இன்றி விவசாயிகள் குடும்பத்தினருடன் கஷ்டப்பட்டு வாழ்கின்றனர். இவ்வாறு வறுமையில் வாழும் விவசாயிகளும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற முடியாத நிலை உள்ளது.

எனவே இந்த திட்டத்தின் நிபந்தனைகளை தளர்த்தி பயன்பாடுகள் விவசாயிகளுக்கும் கிடைத்திட முதல்-அமைச்சர் வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் முல்லை பெரியாறு வைகை ஒருபோக பாசன விவசாயிகள் சங்க செயலாளர் மலம்பட்டி ரவி நன்றி கூறினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story