டெங்கு கொசு உருவாவதை தடுக்க நடவடிக்கை-நெமிலி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

டெங்கு கொசு உருவாவதை தடுக்க நடவடிக்கை-நெமிலி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
x

டெங்கு கொசு உருவாவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது என நெமிலி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராணிப்பேட்டை

நெமிலி

டெங்கு கொசு உருவாவதை தடுக்க நடவடிக்கை எடுப்பது என நெமிலி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெமிலி பேரூராட்சி மன்றக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மனோகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில்

கடந்த ஒரு வாரமாக பெய்த கடும் மழையின் காரணமாக டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பேரூராட்சியாக உருவாக்க வேண்டும். மழை நீரை வீணாக்காமல் சேமிக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேரூராட்சித் துணைத் தலைவர் சந்திரசேகர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story