எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நேரலை செய்யும் கோரிக்கை மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு


எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நேரலை செய்யும் கோரிக்கை மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் - சபாநாயகர் அப்பாவு
x

எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நேரலை செய்யும் கோரிக்கை மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சென்னை,

சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான பதிலுரையாற்றி வருகிறார். இந்த நிலையில் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பதிலுரை வழங்கவிடாமல் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

நேரலை தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்து பேசியதாவது:-

"எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நேரலை செய்யும் கோரிக்கை மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பாக நடக்கும் நிகழ்வுகளுக்கு இடையே முதல்-அமைச்சர் பதிலுரையை புறக்கணிக்கப்படுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் பேசும் போது இரண்டு மணி நேரம் உணவு இடைவேளைக்கு கூட செல்லாமல் முதல்-அமைச்சர் அமர்ந்திருந்தார். அவை நாகரீகமாக நடப்பதை அதிமுக விரும்பவில்லையோ என எண்ண தோன்றுகிறது. அவையை விட்டு அதிமுக சென்றது வருத்தமாகவும், வேதனையாகவும் உள்ளது. எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு அதிக நேரம் வழங்கப்படுகிறது" என்று கூறினார்.


Next Story