கோவையில் ரசிகர்கள் முன்பு தோன்றிய நடிகர் அருண் விஜய்
யானை திரைப்படம் வெளியாவதையொட்டி கோவையில் ரசிகர்கள் முன்பு நடிகர் அருண் விஜய் தோன்றி்னார்
கோவை
சினிமா இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்த யானை திரைப்படம் வருகிற 17-ந் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதற்கான முன்னோட்ட காட்சி வெளியிடப்பட்டு உள்ளது
. இந்த நிலையில் கோவையில் உள்ள ஒரு தியேட்டரில் யானை திரைப்படம் முன்னோட்ட காட்சி வெளியிடப்பட்டது. அப்போது திடீரென்று ரசிகர்கள் முன்பு நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஹரி ஆகியோர் தோன்றி ரசிகர்களை சந்தித்தனர்.
பின்னர் நடிகர் அருண்விஜய் நிருபர்களிடம் கூறும்போது, யானை திரைப்படம் வெளியாவதையொட்டி ரசிகர்களை சந்திப்பதை கோவையில் தொடங்கி உள்ளோம். தொடர்ந்து பல இடங்களுக்கு சென்று ரசிகர்களை சந்திக்க உள்ளோம்
. இந்த படம் குடும்ப கதையம்சம் கொண்டது. எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றார். இயக்குனர் ஹரி கூறும்போது, தற்போது பொதுமக்கள் தியேட்டருக்கு வர தொடங்கி உள்ளனர். அதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.