திண்டிவனத்தில் இந்து முறைப்படி நடந்தது நகைச்சுவை நடிகர் புகழ் திருமணம் கோவையை சேர்ந்த காதலியை கரம்பிடித்தார்


திண்டிவனத்தில் இந்து முறைப்படி நடந்தது  நகைச்சுவை நடிகர் புகழ் திருமணம்  கோவையை சேர்ந்த காதலியை கரம்பிடித்தார்
x

திண்டிவனத்தில் நகைச்சுவை நடிகர் புகழ் திருமணம் நடைபெற்றது.

விழுப்புரம்


திண்டிவனம்,

சின்னத்திரையில் வெளியான ஒரு சமையல் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இதன் மூலம் அவர் வெள்ளித்திரையில் அறிமுகமாகி வலிமை, வீட்டில விஷேசம், எதற்கும் துணிந்தவன், சபாபதி, யானை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் புகழ், சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பென்சியா என்பவரை காதலிப்பதாக தெரிவித்து இருந்தார். இதன்பின்னர் இவர்களது திருமணம் எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தீவனூரில் உள்ள பொய்யாமொழி விநாயகர் கோவிலில் புகழ்-பென்சியா திருமணம் நேற்று இந்து முறைப்படி நடந்தது.

விழாவில் நடிகர் சசிக்குமார், மதுரை முத்து மற்றும் திரைத்துறையினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக, நகைச்சுவை நடிகர் புகழின் திருமணம் பற்றி அறிந்தவுடன் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் திரண்டு வந்தும், மணமக்களை வாழ்த்தினர். மேலும் பலர் திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் புகழ் கடலூரை சேர்ந்தவர் ஆவார். அதேபோல் மணப்பெண் பென்சியா கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியை சேர்ந்த உமர் - பரித்தா தம்பதியின் மகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story