நடிகர் ராதாரவியின் டப்பிங் சங்க அலுவலகத்திற்கு மீண்டும் சீல்


நடிகர் ராதாரவியின் டப்பிங் சங்க அலுவலகத்திற்கு மீண்டும் சீல்
x

காவல்துறையினர் முன்னிலையில் டப்பிங் சங்க அலுவலகத்திற்கு இன்று மீண்டும் சீல் வைக்கப்பட்டது.

சென்னை,

நடிகர் ராதாரவி தலைமையிலான டப்பிங் சங்க கட்டிடம் அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பான பல கட்ட விசாரணைக்குப் பிறகு ராதாரவி தரப்பில் இருந்து தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால், கடந்த மார்ச் 11-ந்தேதி சாலிகிராமத்தில் உள்ள டப்பிங் சங்க அலுவலகத்திற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது தொடர்பாக டப்பிங் யூனியன் சார்பில் சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மார்ச் 29-ந்தேதி மாநகராட்சி அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவுப்படி பொருட்களை எடுக்கவும், இடித்துக் கட்டுவதற்கு விண்ணப்பிக்கவும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கினர். இந்த அவகாசம் முடிந்த நிலையில், காவல்துறையினர் முன்னிலையில் டப்பிங் சங்க அலுவலகத்திற்கு இன்று மீண்டும் சீல் வைக்கப்பட்டது.


1 More update

Next Story