நடிகர் ரஜினிகாந்த் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க உள்ளார் - அண்ணன் சத்தியநாராயணன் பேட்டி


நடிகர் ரஜினிகாந்த் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க உள்ளார் - அண்ணன் சத்தியநாராயணன் பேட்டி
x
தினத்தந்தி 3 Aug 2023 9:36 PM IST (Updated: 3 Aug 2023 9:47 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்த் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க உள்ளதாக அவரது அண்ணன் சத்தியநாராயணன் தெரிவித்தார்.

திருப்பத்தூர்,

நடிகர் ரஜினிகாந்த் 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க உள்ளதாக அவரது அண்ணன் சத்தியநாராயணன் தெரிவித்தார்.

திருப்பத்தூர் தாலுகா ஆண்டியப்பனூர் கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணன் வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆண்டியப்பனூர் கிராமத்தில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது. சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். எனவே பக்தர்கள் வசதிக்காக ஆண்டியப்பனூர் கூட்ரோட்டில் இருந்து கோவில் வரை சாலை அமைத்துத்தர வேண்டும்.

மக்களின் ஆசீர்வாதத்தினால் தம்பி ரஜினிகாந்த் வளர்ந்து, மக்களுக்கு சேவை செய்து வருகிறார். வருகிற 10-ந் தேதி ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெளிவரப் போகிறது. அம்மன் அருளால் படம் வெற்றி பெறும். ஜெயிலர் படத்தில் அவர் ஜெயில் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் இன்னும் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க உள்ளார். அதில் 5 படங்கள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் கட்டப்பட்ட தாய், தந்தை கோவிலுக்கு விரைவில் வர உள்ளார். தற்போது அவரது உடல் நலம் நன்றாக உள்ளது.

சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிகாந்த்துக்கு மக்கள் வழங்கியது. மக்கள் விரும்பினால் அந்த பட்டத்தை யார் வேண்டுமானாலும் வாங்கட்டும் என்றார். இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பேட்டியின் போது கர்நாடகா மாநில ரஜினி மன்ற தலைவர் சந்திரகாந்த், வாணியம்பாடி அன்பரசு உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story