தாய்-சேய் நல கண்காணிப்பு மையத்திற்கு வந்த நடிகர் சசிகுமார்


தாய்-சேய் நல கண்காணிப்பு மையத்திற்கு வந்த நடிகர் சசிகுமார்
x

தாய்-சேய் நல கண்காணிப்பு மையத்திற்கு வந்த நடிகர் சசிகுமார்

தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி சார்பில் முதல் முறையாக 1,212 கர்ப்பிணிகள் பாதுகாப்புடனும், இறப்பு இல்லா கர்ப்பிணிகள் என்ற இலக்கை அடையும் நோக்கில் தாய்-சேய் நல கண்காணிப்பு மையம் கடந்த 3-ந் தேதி தொடங்கப்பட்டது.

இந்த மையம் மூலம் வீடு தேடி சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதை அறிந்த திரைப்பட இயக்குனரும், நடிகருமான சசிகுமார் நேற்று தஞ்சை மாநகராட்சி அலுவலகத்துக்கு நேரில் வந்தார். அவரை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணைமேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தாய்-சேய் கண்காணிப்பு மையத்தை நடிகர் சசிகுமார் பார்வையிட்டு, செல்போன் மூலம் கர்ப்பிணிகளிடம் பேசி, கவனமாக இருக்குமாறும், அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுரை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தஞ்சைக்கு வேறு ஒரு நிகழ்வுக்காக வந்த நான், தஞ்சை மாநகராட்சியின் செயல்பாடுகளை அறிந்து பாராட்ட வேண்டும் என்பதற்காக நேரில் வந்தேன். கர்ப்பிணிகளை பாதுகாக்கும் விதத்தில் தமிழ்நாட்டில் முதல்முறை மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசுக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர்நல அலுவலர் சுபாஷ்காந்தி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story