மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 1,000 புத்தகங்கள் வழங்கிய நடிகர் விஜய்சேதுபதி


மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 1,000 புத்தகங்கள் வழங்கிய நடிகர் விஜய்சேதுபதி
x

மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 1,000 புத்தகங்களை நடிகர் விஜய்சேதுபதி வழங்கினார்

மதுரை


மதுரை மத்திய சிறையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனி சிறைகள் உள்ளன. இங்கு மொத்தமாக 1600-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். அவர்களின் சிறை வாழ்க்கையை பயனுள்ள விதத்தில் மேம்படுத்தவும், அவர்களின் எண்ண ஓட்டத்தை சீர்படுத்தும் விதமாக சிறையில் அதிக புத்தகங்கள் கொண்டு நூலகம் அமைக்க சிறை நிர்வாகம் முடிவு செய்தது. அதனை பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்க திட்டமிடப்பட்டது. மேலும் அந்த நூலகத்தில் ஒரு லட்சம் புத்தகங்களை இருப்பில் வைப்பது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்கான முயற்சிகளை மதுரை சிறைத்துறை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்தகண்ணன் மற்றும் சிறை அதிகாரி பாலகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து எண்ணற்ற புத்தகங்களை பொதுமக்கள், சமூகஆர்வலர்கள், வக்கீல்கள் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி நேற்று காலை மதுரை மத்திய சிறைக்கு வந்தார். அங்கு டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்தகண்ணனை நேரில் சந்தித்து 1000 புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார். அவரை சிறைத்துறை அதிகாரிகள் பாராட்டினர்.


Next Story