நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்


நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்
x

நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் என்று திருவண்ணாமலையில் நடிகர் அருண்விஜய் கூறினார்.

திருவண்ணாமலை

நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் என்று திருவண்ணாமலையில் நடிகர் அருண்விஜய் கூறினார்.

கிரிவலம்

பிரபல திரைப்பட நடிகர் அருண் விஜய் நடித்த மிஷன் திரைப்படம் விரைவில் திரையில் வெளியாக உள்ளது.

மிஷன் திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்த நடிகர் அருண்விஜய் நேற்று இரவு அவரது மனைவியுடன் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்றார்.

பின்னர் அவர் இன்று காலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் சம்மந்த விநாயகர், அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் அவரை கண்டதும் பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். செல்போனில் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

அவருக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பெரும்பாலானோருடன் செல்பி எடுத்து கொண்டார்.

முன்னதாக அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலையில் படப்பிடிப்பு

அருணாசலேஸ்வரரை எப்போது தரிசனம் செய்தாலும் மன நிம்மதியும், தெளிவும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். மிஷன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

பாலா தயாரிப்பில் வணங்கான் படப்பிடிப்பு நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. வணங்கான் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது. மேலும் இன்றைய இளம் தலைமுறையினர் சாமி பக்தியும், தெளிவான முடிவு எடுக்கும் அளவிற்கு இறைவன் மீது நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.

நல்ல விஷயம்

நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம் தான். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வருபவர்களை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயமாக தான் பார்க்கிறேன்.

அவர் முதலில் அறிவிக்க வேண்டும். புதிதாக வருபவர்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வரவேற்க வேண்டும்.

நான் அரசியலுக்கு வருவது சாத்தியமில்லை. எனது நடிப்பு பயணம் நிறைய உள்ளது. அதில் சாதிக்க நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டி உள்ளது.

நான் ரஜினிகாந்தின் ரசிகன், நானும் ஜெயிலர் படத்தை காண ஆவலோடு இருக்கிறேன்.

விரைவில் நடிகர் சங்க கட்டிடம் குறித்து அதிகாரபூர்வ முடிவை சங்கத்தினர் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள்.

அவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story