நடிகை சொர்ணமால்யா பரதநாட்டியம்


மன்னர் நூற்றாண்டு விழாவையொட்டி நடிகை சொர்ணமால்யா பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான் மன்னர் பரம்பரையில், 9-வது மன்னர் ஸ்ரீபிரகதாம்பாள் தாஸ் ராஜகோபால தொண்டைமான் ஆவார். இவர் கடந்த 23-6-1922-ல் பிறந்தார். இவரது பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்தநிலையில் மன்னரின் நூற்றாண்டு விழா கடந்த 23-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் 3-ம் நாளான நேற்று மாலை திரைப்பட நடிகை சொர்ணமால்யா பரதநாட்டியத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலை வகித்தார். விழாக்குழு செயலாளர் சம்பத்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிவகங்கை மன்னர் குடும்பத்தை சேர்ந்த டி.எஸ்.கே.ராணி மதுராந்தகி நாச்சியார், ராஜ்குமார் மகேஷ்துரை ஆகியோர் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து பட்டிமன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ராஜகோபால தொண்டைமான், சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story