பிடிவாரண்டு பிறப்பித்து போலீசார் தேடுவதால் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றி வரும் நடிகை மீரா மிதுன்


பிடிவாரண்டு பிறப்பித்து போலீசார் தேடுவதால் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றி வரும் நடிகை மீரா மிதுன்
x

பிடிவாரண்டு பிறப்பித்து போலீசார் தேடுவதால் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றி வரும் நடிகை மீரா மிதுன் விரைவில் கைது செய்து ஆஜர்படுத்துவோம் என கோர்ட்டில் தகவல்.

சென்னை,

தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதன்பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீராமிதுன் ஆஜராகவில்லை.

போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், 'மீராமிதுன் பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியில் தலைமறைவாக இருப்பதை அறிந்து போலீசார் அங்கு சென்று அவரை தேடினர். அப்போது அவர், அங்கிருந்து வேறு இடத்துக்கு சென்று விட்டார். மீராமிதுன் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி தலைமறைவாக இருந்து வருகிறார். செல்போன் எண்ணையும் அடிக்கடி மாற்றி வருகிறார். விரைவில் அவரை கைது செய்து ஆஜர்படுத்துவோம்' என்றார்.

இதைத்தொடர்ந்து மீராமிதுனை விரைந்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்திய நீதிபதி, விசாரணையை அக்டோபர் 19-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story