நடிகைக்கு மாமனார் பாலியல் தொல்லை...! கொலைவெறி தாக்குதல்? காயங்களுடன் கண்ணீர் மல்க பேட்டி


தினத்தந்தி 6 July 2022 3:25 PM IST (Updated: 6 July 2022 3:29 PM IST)
t-max-icont-min-icon

துணை நடிகை ஒருவர், தன்னுடைய மாமனார் தனக்கு பாலியல் தொந்தரவு மற்றும், கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சென்னை,

சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள கெருங்கம்பாக்கம், பாலகிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள துணை நடிகை (நிவேதா) பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இவர் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 'பேரன்பு' போன்ற சில சீரியல்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் சுரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் ஆகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் இவர் மாங்காடு காவல் நிலையத்தில் தன்னுடைய மாமனார் மற்றும் மாமியார் குறித்து புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் போலீசார் இது குறித்து துணை நடிகையின் மாமனார் -மாமியாரிடம் விசாரிக்க சென்றபோது அவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர். எனவே அவர்களை போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகிறார்கள்.

துணை நடிகை செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-

'நான் ஒரு நடிகையாக இருப்பதால் தன்னுடைய மாமனார் சரவணவேல் மற்றும் மாமியார் சாந்தி ஆகியோர் தன்னை மதிப்பதில்லை. பலமுறை நீ ஒரு நடிகை தானே என கேட்டு மாமனார் உடல் ரீதியாக தன்னிடம் அத்துமீற முயன்றுள்ளார். அதேபோல் பலமுறை இது குறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தபோதும் மாமியாரின் நெருங்கிய உறவினர் காவல் துறையில் மிக உயரிய பதவியில் இருப்பதால் தன்னுடைய புகார் மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சில தினங்களுக்கு முன்பு கூட தன்னுடைய மாமனார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் அவரை தடுத்த காரணத்தால், பெரிய மரக்கட்டையை கொண்டு தன் மீது கொலவெறி தாக்குதல் நடத்தினார். இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தான் சிகிச்சை பெற்றதாகவும் கூறியுள்ளார்.

1 More update

Next Story