கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு


கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு
x

காரியாபட்டி அருேக கி.பி. 10-ம் நூற்றாண்ைட சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருேக கி.பி. 10-ம் நூற்றாண்ைட சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு

காரியாபட்டி தாலுகா முஷ்டக்குறிச்சி கண்மாய்க்குள் நீர் மட்டத்தை அளப்பதற்கு நடப்பட்ட நீர்மட்டக் கல்லில் கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய அரசின் தொல்லியல் துறையை சேர்ந்த அலுவலர் ராஜேஷ் அளித்த தகவலின் பேரில் அங்கு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரியின் விலங்கியல் துறை உதவிப்பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான ரவிச்சந்திரன் கூறியதாவது, பாண்டிய நாட்டில் சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

இரட்டை குமிழித்தூண்கள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வேளாண் தொழிலை மேம்படுத்த கண்மாய்கள், குளங்கள் வெட்டப்பட்டு அவற்றில் மடைகள் அமைக்கப்பட்டு நீர் நிர்வாகம் முறையாக செய்யப்பட்டிருக்கின்றது.

குளத்தின் அல்லது கண்மாய் நீரின் மட்டத்தை அளவிட மிக நேர்த்தியாக இரட்டை குமிழித்தூண்கள் நடப்பட்டு அதில் நீர்மட்ட அளவை படுகைக்கல் செருகப்பட்டிருக்கும்.

இது போன்ற அமைப்புகள் தமிழகத்தின் தொன்மையான கண்மாய்களிலும், குளங்களிலும் காணப்படுகின்றன. முஷ்டக்குறிச்சியின் கண்மாய்க்குள் இருக்கும் குமிழித்தூணில் 5 வரிகளில் எழுதப்பட்ட கல்வெட்டு உள்ளது.

தாமரைப்பதக்கம்

8½ அடி உயர கல்லின் உச்சியில் தாமரைப்பதக்கம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆமூரைச் சேர்ந்த ஆர்ப்பெருஞ்ச் செம்மான் என பெயர் பெற்ற வேமன் இருமஞ்சையன் இந்த நிலைக்கால் செய்வித்த செய்தியை இந்த கல்வெட்டு தெரிவிக்கின்றது. இந்த கல்வெட்டின் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மடைத்தூணை "நிலைக்கால்" என பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள் என அறிய முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story