ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி ஆதார் அட்டையை தாசில்தாரிடம் ஒப்படைத்த வாலிபர்
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட திப்பம்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 26). வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில் குமாரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த குமார், தனது குடும்பத்தினருடன் ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதாக கூறி தாசில்தார் கோவிந்தராஜிடம், தனது ஆதார் அட்டை, ரேஷன் கார்ட்டு ஆகியவற்றை ஒப்படைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
Next Story