ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டிடம், பள்ளி வகுப்பறை


ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டிடம், பள்ளி வகுப்பறை
x

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டிடம், பள்ளி வகுப்பறை பணிகளை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சின்னசமுத்திரம் ஊராட்சி, பிச்சனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.10 லட்சத்தில் நோயாளிகள் காத்திருப்பு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் டி.பன்னிர்செல்வம் தலைமை வகித்தார். துணை தலைவர் ஆர்.சத்தியமூர்த்தி வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார் முன்னிலை வகித்தார். புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கூடுதல் கட்டிடம் கட்டும் பணிகளை ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பேசினார்

இதேபோன்று திருப்பத்தூர் ஒன்றியம் ஜம்மணபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்திலிருந்து ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம், ஜம்மணபுதூர் முதல் ஏ.கே.மோட்டூர் வரை ரூ.32 லட்சத்தில் இணைப்பு சாலைக்கு தரைப்பாலம் அமைத்தல் பணிகளையும் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்யா, திருப்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர். விஜயாஅருணாசலம், துணைத்தலைவர் ஞானசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கஸ்தூரி ரகு, இளவரசி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் த.குமார் நன்றி கூறினார்.


Next Story