கூடுதல் திறன் மின்மாற்றி திறப்பு


கூடுதல் திறன் மின்மாற்றி திறப்பு
x

கூடுதல் திறன் மின்மாற்றியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

நெமிலி பேரூராட்சியில் புன்னை துணை மின்நிலையம் இயங்கிவருகிறது. இந்த மின்நிலையத்தில் கூடுதல் திறன் கொண்ட 16 எம்.வி.ஏ. மின்மாற்றியை முதல்-மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து புன்னை துணைமின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேலூர் மேற்பார்வை பொறியாளர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். அரக்கோணம் கோட்ட செயற்பொறியாளர் குமரேசன், நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக சோளிங்கர் தொகுதி முனிரத்னம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மின்மாற்றியை இயக்கிவைத்தார். தற்போது இந்த திறன்மிகு மின்மாற்றியால் புன்னை, நெமிலி, நாகவேடு, காட்டுப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் அழுத்த குறைபாடுகள் நீக்கப்பட்டு சீரான மின்சார வினியோகம் கிடைக்கும்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெருமாள், ஒன்றியக்கு துணைத் தலைவர் தீனதயாளன், நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், நெமிலி நகர காங்கிரஸ் தலைவர் வேலு உள்ளிட்ட மின் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story