பஸ் நிலையத்தில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு


பஸ் நிலையத்தில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
x

காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில் கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஆய்வு செய்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில், கராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார். அப்போது பொது கழிப்பிடத்தில் ஆண்கள் கழிவறை மற்றும் பெண்கள் கழிவறைகள் ஆய்வு செய்து கழிப்பிடங்களை முறையாக பராமரிக்க அறிவுரைகள் வழங்கினார்.

2022-23-ம் ஆண்டு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் திருப்பாற்கடல் மயானத்தில் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை பணியினை ஆய்வு செய்தார். அப்போது தகன எரிவாயு மேடையினை நவீனமாக அனைத்து வசதிகளுடன் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொது மக்கள் பயன்படும் வகையில் தகன மேடையினை சுற்றி பூங்கா அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர், வேலூர் மண்டல பேரூராசிகளின் உதவி இயக்குனர், உதவி செயற் பொறியாளர்கள், செயல் அலுவலர், இளநிலை பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story