தியாகதுருகத்தில் ரூ.65½ லட்சத்தில் குளம் வெட்டும் பணி கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு


தியாகதுருகத்தில் ரூ.65½ லட்சத்தில் குளம் வெட்டும் பணி கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 23 April 2023 6:45 PM GMT (Updated: 23 April 2023 6:45 PM GMT)

தியாகதுருகத்தில் ரூ.65½ லட்சத்தில் குளம் வெட்டும் பணியை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட உதயமாம்பட்டு பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பீட்டில் அய்யனார் குளம் வெட்டும் பணி நடைபெறுகிறது. இப்பணியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு செயலாளருமான சிவ் தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார். அப்போது குளத்தின் மேல்தளத்தின் இரு பக்கமும் நடைபாதை அமைக்கப்பட வேண்டும். மழை நீர் தேங்காமல் வழிந்தோடும் வகையில் கரைப்பகுதி அமைக்க வேண்டும். மேலும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பணிகள் நிறைவடைந்ததும் குளத்தின் கரை பகுதியில் புளிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, திருச்சி மண்டல பொறியாளர் (பேரூராட்சி பணிகள்) கருப்பையா, உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி, செயல் அலுவலர் மேகநாதன், இளநிலை பொறியாளர் சீனுவாசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story