வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
சிறுபாக்கம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர்
சிறுபாக்கம்,
சிறுபாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் நலன் கருதி ரூ.33 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை கடலூர் கூடுதல் கலெக்டர் மதுபாலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் பணியை தரமாகவும் விரைந்தும் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து வடபாதி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், சாலை பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமணி, வீராங்கன், பொறியாளர்கள் செந்தில்வடிவு, மணிவேல், செந்தில் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story