ஆனைமலை பகுதியில் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
ஆனைமலை பகுதியில் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
ஆனைமலை
ஆழியாறு அகதிகள் முகாமில் வீடுகள் கட்டும் பணியை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
கூடுதல் கலெக்டர் ஆய்வு
ஆனைமலையை அடுத்த திவான்சாபுதூர் ஊராட்சியில் கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
வளந்தாய மரம் சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சத்தில் வட் டார சுகாதார மையம் கட்டும் பணி, சோமந்துறைசித்தூர் மற்றும் சுப்பையகவுண்டன்புதூரில் சிமெண்ட் மற்றும் தார்சாலை அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் பணி நடைபெற்று வருகிறது. இதை கூடுதல் கலெக்டர் அலர்மேலு மங்கை, சப்-கலெக்டர் பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வீடுகள் கட்டும் பணி
பின்னர் அவர்கள், சரளைபதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான அடிப்படை தேவைகள், கோட்டூரில் இலங்கை அகதிகள் முகாமில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் பார்வையிட்டனர்.
இது போல் அவர்கள், ஆழியார் பகுதியில் கட்டிடம் கட்டுவதற் காக தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், ஜெயந்தி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.