காரைக்கால்-எர்ணாகுளம் விரைவு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்


காரைக்கால்-எர்ணாகுளம் விரைவு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்
x

காரைக்கால்-எர்ணாகுளம் விரைவு ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூர் - நாகை ரெயில் உபயோகிப்போர் நலசங்க தலைவர் மோகன், செயலாளர் சீத்திக் ஆகியோர் தென்னக ரெயில்வேக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

நாகூர், நாகை, திருவாரூர், அதிராம்பட்டினம், வேதாரண்யம், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் இருந்து புனித ஹஜ் பயணத்துக்கு கொச்சி விமான நிலையம் வழியாக தான் இந்த ஆண்டு சென்று வரவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஹஜ் பயணம் செல்பவர்களின் வசதிக்காக காரைக்கால் - எர்ணாகுளம் தினசரி விரைவு ெரயிலில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி வரை கூடுதலாக ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியை இணைக்க வேண்டும். மேலும் திரும்பி வருவதற்கு வசதியாகவும், வேளாங்கண்ணி திருவிழா நடக்கும் காலத்தை கருதியும் மறு மார்க்கத்தில் எர்ணாகுளம் - காரைக்கால் தினசரி விரைவு ெரயிலில் வருகிற 28-8-22 முதல் 15-9-22 வரை கூடுதலாக ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியை இணைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story