உளவுப் பிரிவுக்கு கூடுதல் போலீசார் நியமனம்
மதவாத குற்றங்களை தடுக்க உளவுப்பிரிவுக்கு கூடுதலாக போலீசாரை நியமிக்க உள்ளதாக கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மதவாத குற்றங்களை தடுக்க உளவுப்பிரிவுக்கு கூடுதலாக போலீசாரை நியமிக்க உள்ளதாக கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கார் வெடிப்பு சம்பவம்
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார்வெடித்து ஜமேஷா முபின் என்ற வாலிபர் பலியானார். இந்த வழக்கு தொடர்பாக அவரது உறவினர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப் பட்டனர். கார் வெடிப்பு சம்பவம் நடந்ததை முன்கூட்டிேய கணிக்க உளவுத்துறை தவறி விட்டதாக கூறப்பட்டது.
கோவை நகரில் மதவாத குற்றங்களை கண்காணிக்க பி.ஆர்.எஸ். வளாகத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவில் (எஸ்.ஐ.யு.) உள்ளது. இதில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், மற்றும் 7 போலீசார் உள்ளனர். அவர்கள் தகவல்களை சேகரித்து துணை சூப்பிரண்டுக்கு தெரிவிக்கிறார்கள்.
சிறப்பு புலனாய்வு பிரிவு
இதேபோல் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் கட்டுப்பாட்டில் சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.சி.) உள்ளது. இதில் ஒரு உதவி கமிஷனர், 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 8 போலீசார் உள்ளனர்.
தற்போது உதவி கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது. இதற்கிடையே தகவல்களை சேகரிப்பதற்காக புலனாய்வு பிரிவுக்கு தற்காலிகமாக ஆயுதப்படை போலீசார் 7 பேர் நியமிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கோவையில் உளவுத்துறைக்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
கூடுதல் போலீசார்
இது குறித்து கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
எஸ்.ஐ.சி.க்கு கூடுதல் பலம் சேர்ப்பதற்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக ஒரு இன்ஸ்பெக்டர் பதவி, 22 போலீசார் பணியிடங்களை உருவாக்க உள்ளோம். இன்ஸ்பெக் டர் நிர்வாக பணியை மேற்கொள்வர். அந்த பிரிவில் உள்ள 30 போலீசாரும் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளை கண்காணித்து தகவல்களை சேகரிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் மாநிலம் முழுவதிலும் உள்ள உளவுத்துறை பலத்தை அதிகரிக்கவும், கோவையில் கூடுதல் கவனம் செலுத்தவும் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.