கொப்பரைக்கு கூடுதல் விலை
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரைக்கு கூடுதல் விலை கிடைத்தது
கோயம்புத்தூர்
ஆனைமலை
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங் காய் ஏலம் நடைபெற்றது. இதில் 65 விவசாயிகள், 314 மூட்டை கொப்பரையை கொண்டு வந்திருந்தனர்.
பின்னர் அவை தரம் பிரிக்கப்பட்டது. ஏலத்தில் 6 வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.
170 மூட்டை முதல் ரக கொப்பரை கிலோ ஒன்றுக்கு 71 ரூபாய் 40 காசு முதல் 79 ரூபாய் வரை ஏலம் போனது. 144 மூட்டை 2-ம் ரக கொப்பரை கிலோ ஒன்றுக்கு 59 ரூபாய் 50 காசு முதல் 68 ரூபாய் 50 காசுக்கு ஏலம் போனது.
கடந்த வாரத்தை விட 68 மூட்டை கொப்பரை குறைவாக வந்தது. வரத்து குறைந்ததால் கடந்த வாரத்தை விட 3 ரூபாய் 60 காசு கூடுதலாக விலை கிடைத்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story