வளர்ச்சி பணிகளை ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் ஆய்வு


வளர்ச்சி பணிகளை ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் ஆய்வு
x

கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் மனிஷ் நாரணவரே பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

ஊரக வளர்ச்சி பணிகள்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் உடையாமுத்தூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.8.44 லட்சம் மதிப்பீட்டில் 120 மீட்டரில் பள்ளி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதேபோல் ரூ.43 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் சமையலறை பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் மனிஷ் நாரணவரே கலெக்டர் அமர்குஷ்வாகாவுடன் ஆய்வு செய்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 100 நாள் வேலை பதிவேட்டினை பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து உடையாமுத்தூர் ஊராட்சி சமத்துவபுரத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.56 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவறைகள் பராமரிப்பு பணியையும், ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி பராமரிப்பு பணியையும் 91 வீடுகளில் ரூ.34.50 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டார்.

அதேபோல் 75 வீடுகளுக்கு ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு பணிகள் மற்றும் 100 நாள் வேலை அட்டைகள், சின்னாரம்பட்டி ஊராட்சியில் 10 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி, மண்புழு உரக்கொட்டகையில் மண்புழு உரம் உற்பத்தி செய்யும் பணி, ரூ.29.40 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணி, தனிநபர் நீர் உறிஞ்சுக்குழிகள என மொத்தம் ரூ.78 இலட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சித்திட்டப் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர் மனிஷ் நாரணவரே பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கட்டுமான பொருளின் தரம்

இந்த ஆய்வுகளின் போது பள்ளி சுற்றுச்சுவரின் தரம், கட்டிடங்களின் பராமரிப்பு பணிகள், வீடுகளின் பராமரிப்பு பணிகள், குடிநீர் இணைப்பு பணிகள் ஆகியவை சரியாக உள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் நடைபெற்று பணியில் பயன்படுத்துகின்ற கட்டுமான பொருட்களின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வுகளின் போது ஊரக வளர்ச்சித் துறை கண்காணிப்பு பொறியாளர்.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, உதவி செயற்பொறியாளர் தமகேஷ்குமார், உதவி திட்ட அலுவலர் ஆப்தா பேகம், வட்டார வளர்ச்சி அலுவலர் துரை, உதவி பொறியாளர்.சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வில்வநாதன், சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் சி.லட்சுமி சந்திரசேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story