கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்கள்-பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை என புகார்


கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் டாக்டர்கள்-பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை என புகார்
x
தினத்தந்தி 25 Nov 2022 12:15 AM IST (Updated: 25 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடு

பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார். ஆணையாளர் ஜென்கிங்ஸ் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) லதா வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை இடிப்பது, தளவாய்பாளையம் ஊராட்சி கரட்டுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் பாராமரிப்பு செய்தல் உள்பட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூடுதலாக 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் கான்கீட் சாலை, மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட 36 பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூடுதலாக டாக்டர்கள் நியமனம்

முன்னதாக கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பேசும் போது கூறுகையில், கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பலமுறை கூட்டத்தில் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கோலார்பட்டியில் பழுதடைந்த நிலையில் உள்ள வேளாண்மை துறை அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்றனர்.

இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதலாக டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வேளாண்மை துறை அதிகாரிகள் கட்டிடத்தை இடிக்க கோரி பரிந்துரை கடிதம் கொடுத்தால், அந்த கட்டிடத்தை இடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story