கூடுதலாக கவுண்ட்டர்கள் திறப்பு
பொள்ளாச்சி தபால் அலுவலகத்தில் கூடுதலாக கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, மாதாந்திர வருமான கணக்கு, அடல் பென்சன் திட்டம், பதிவு தபால் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நேற்று முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தபால் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கூடுதல் 2 கவுண்ட்டர்கள் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை அஞ்சல் அதிகாரி முனிராஜ் தலைமை தாங்கினார். கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் பொதுமக்களுக்கு தபால் சேவை குறித்தும், நேர நீட்டிப்பு குறித்து அதிகாரிகள் விளக்கி பேசினார்கள். விழாவில் தபால் நிலைய அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.