பெரிய வள்ளி குளத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி


பெரிய வள்ளி குளத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி
x

விருதுநகர் அருகே பெரிய வள்ளி குளத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர்

விருதுநகர் அருகே பெரிய வள்ளி குளத்தில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

மாணவர் விடுதி

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் விருதுநகர் அருகே பெரிய வள்ளி குளம் கிராமத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் நல முதுகலை கல்லூரி மாணவர் விடுதி ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த விடுதி கட்டுமான பணியினை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கட்டுமான பணி

கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், நகரசபை தலைவர் மாதவன், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண் குமார், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் (பொறுப்பு) சிவகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story