ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
x

ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ராமநாதபுரம்

திருப்புல்லாணி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் ஸ்ரீ ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நேற்று கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு கொடிமரத்திற்கும், சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாபிஷேக ராமருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 4-ந் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகின்றது. 7-ந் தேதி உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், தலைமையில் சரக பொறுப்பாளர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story