கரையூரான் நீலமேகம் கோவிலில் ஆடி சிறப்பு பூஜை


கரையூரான் நீலமேகம் கோவிலில் ஆடி சிறப்பு பூஜை
x

கரையூரான் நீலமேகம் கோவிலில் ஆடி சிறப்பு பூஜை நடந்தது.

கரூர்

தோகைமலை அருகே ஆர்டிமலை ஊராட்சியில் பிரசித்தி பெற்ற கரையூரான் நீலமேகம் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 28 அன்று சிறப்பு பூஜை நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பூஜை நடைபெறவில்லை. இதையடுத்து இந்தாண்டு சிறப்பு பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று ஆடி 28-யை முன்னிட்டு கரையூரான் நீலமேகம் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி திரளான பக்தர்கள் கோவில் முன்பு 250-க்கும் மேற்பட்ட கிடாக்களை வெட்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அங்கேயே உணவு சமைக்கப்பட்டு சுவாமிக்கு படையல் போட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் முதல் இரவு வரை அன்னதானம் நடந்தது.

மேலும் கல்வி வரம், வேலைவாய்ப்பு, திருமண தடை, பில்லி சூனியம், கோர்ட்டு வழக்குகள், நிலத்தகராறு, குடும்ப பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை ெசலுத்தி வழிபட்டனர்.


Next Story