ஆடிப்பூரம்: புதிய கமல வாகனத்தில் எழுந்தருளிய மதுரை மீனாட்சி அம்மன்


ஆடிப்பூரம்: புதிய கமல வாகனத்தில் எழுந்தருளிய மதுரை மீனாட்சி அம்மன்
x

பல ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் புதிய கமல வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்.

மதுரை

பல ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் புதிய கமல வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்.

ஆடிப்பூர திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் 3-ம் நாளான நேற்று ஆடிப்பூரத்தன்று மூலஸ்தானம், உற்சவம் மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவமும் நடந்தது. அப்போது அம்மனுக்கு வளையல், திருமாங்கல்ய கயிறு, குங்குமம் வைத்து அர்ச்சனை செய்தனர். பின்னர் அதனை பக்தர்களுக்கு பட்டர்கள் வழங்கினார்கள்.

புதிய வாகனம்

ஆடிபூரத்தன்று பல ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கமல (தாமரை பூ) வாகனத்தில் வலம் வருவது வழக்கம். மரக்கட்டையால் செய்யப்பட்ட அந்த வாகனம் நாளடைவில் பழுதடைந்தது. எனவே அந்த வாகனத்தில் அம்மன் வலம் வருவதற்கு பதில் வேறு வாகனத்தில் வலம் வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த வக்கீல் ஒருவர் அம்மனுக்கு புதிதாக கமல வாகனம் செய்து கொடுத்தார். அந்த வாகனம் நேற்று காலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஸ்தானிக பட்டர்கள் ஹாலஸ், செந்தில் சிறப்பு பூஜை செய்த பின்பு புதிய வாகனம் வெள்ளோட்டம் நடந்தது. இந்த நிகழ்வில் கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து இரவு வீதி உலாவில் மீனாட்சி அம்மன் அந்த புதிய கமல வாகனத்தில் எழுந்தருளி பக்தர்கள் மத்தியில் பவனி வந்து காட்சி அளித்தார்.


Next Story