ஆதிதமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
ஆதிதமிழர் கட்சியின் சார்பில் கட்டாய இந்தி திணிப்பு பரிந்துரையை திரும்பபெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆதிதமிழர் கட்சியின் சார்பில் கட்டாய இந்தி திணிப்பு பரிந்துரையை திரும்பபெறக்கோரியும், சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்காத ஆளுநரை திரும்ப பெறக்கோரியும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மண்டபம் ஒன்றிய செயலாளர் திருமலை வரவேற்று பேசினார். இதில் பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் தமிழ்வாணன், மாநில செயற்குழு உறுப்பினர் யோகேஸ்வரன், வீரகுல தமிழர் படை மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் இரணியன், வைகை பாசன விவசாயிகள் சங்க பொது செயலாளர் மதுரைவீரன், காங்கிரஸ் கட்சி மாநில பேச்சாளர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட நிதி செயலாளர் பாண்டி நன்றி கூறினார்.