ஆதித்தனார் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ஆதித்தனார் கல்லூரியில்  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிகவியல் துறையில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முன்னாள் முதல்வரும், வணிகவியல் துறை முன்னாள் தலைவருமான கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தனசிங் வரவேற்று பேசினார். முன்னாள் துறைத்தலைவர் சவுந்திரராஜன், ஜெயபாஸ்கரன், வக்கீல் கார்மேகம், முன்னாள் அலுவலக கண்காணிப்பாளர் பரமசிவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

முன்னாள் மாணவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை சாதிக் தொகுத்து வழங்கினார். டிமிட்ரோ நன்றி கூறினார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவரும், சிவந்தி வானொலி தொழில்நுட்ப அலுவலருமான கண்ணன், ராமச்சந்திரன், சித்திரைகுமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

முன்னதாக பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் சென்றனர். அங்குள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story