ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக ஆண்டு விழா


ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக ஆண்டு விழா
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழக ஆண்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பயின்றோர் கழகத்தின் 54-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் முன்னிலை வகித்தார். பயின்றோர் கழக துணைத்தலைவர் ஜெயசிங் சாம்ராஜ் வரவேற்று பேசினார்.

முன்னாள் மாணவரும், ஓய்வுபெற்ற தொழிலாளர் நல கூடுதல் ஆணையருமான இமானுவேல் தங்கராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பயின்றோர் கழக இணை செயலாளர் தர்மபெருமாள் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் பொருளாளர் பகவதி பாண்டியன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். பணிநிறைவு செய்த பேராசிரியர்கள் ரமேஷ், சுந்தரவடிவேல், கதிரேசன், முனைவர் பட்டம் பெற்ற கோகிலா, திருச்செல்வன், சிறப்பு விருது பெற்ற முனைவர் லிங்கத்துரை ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த காயல்பட்டினம் சுபைதா மேல்நிலைப்பள்ளி மாணவி நஜிபா ஹில்மியாவுக்கு ரூ.1,500-ம், 2-வது இடம் பிடித்த பூச்சிக்காடு இந்து உயர்நிலைப்பள்ளி மாணவி ஆனந்தலட்சுமிக்கு ரூ.1,000-ம், 3-வது இடம் பிடித்த காயல்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி முத்து சபுராவுக்கு ரூ.750-ம் பரிசாக வழங்கப்பட்டது.

கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த அருணாசலத்துக்கு ரூ.1,500-ம், 2-வது இடம் பிடித்த மாணவி வினிஷாவுக்கு ரூ.1,000-ம், 3-வது இடம் பிடித்த மாணவர் தமிழரசுவுக்கு ரூ.750-ம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 24, 27 ஆகிய தேதிகளில் கல்லூரி நிறுவனர் சி.பா.ஆதித்தனார், நிறுவனர் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆகியோர் பிறந்த நாள் விழாக்களை சிறப்பாக கொண்டாடுவது. இதனை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி-வினா போட்டிகளை நடத்தி பரிசு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில், 'தொழில் முனைவு- ஒரு வெற்றிகரமான தொழில் விருப்பம்' என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது. நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன், சேவியர் கல்லூரி பேராசிரியர்கள் முருகேசன், பிரின்ஸ், ஸ்டெல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

1 More update

Next Story