10, 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்


10, 12-ம் வகுப்பு முடித்த  ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 16 Sept 2023 12:45 AM IST (Updated: 16 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

10, 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் பட்ட, பட்டயப்படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை


10, 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் பட்ட, பட்டயப்படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலை வாய்ப்பு

கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு, ஓட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் 3 வருட முழு நேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன் வேலைவாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும்.

சென்னை தரமணியிலுள்ள புகழ் பெற்ற நிறுவனத்தில், 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்களுக்கு 3 வருட முழு நேர பட்டப்படிப்பும், ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டய படிப்பும் பயிலலாம்.

படிப்பு செலவு

மேலும், 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர், உணவு மற்றும் பானசேவையில் கைவினைதிறன் படிப்பு, பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு, முன் அலுவலக செயல்பாட்டில் பட்டயப்படிப்பு, ஹவுஸ் கீப்பிங் செயல்பாட்டில் பட்டயப்படிப்பு, உணவு முறை மற்றும் உணவு சேவை முதுகலை பட்டதாரி பட்டயப்படிப்பு, விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டயப்படிப்பில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமான நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர்தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும்.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 10, 12-ம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.

இணையதளத்தில்

ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் வருகிற 19-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story