கும்கி யானைகள் உதவியுடன் மரப்பாலம் கட்டும் ஆதிவாசி மக்கள்


கும்கி யானைகள் உதவியுடன் மரப்பாலம் கட்டும் ஆதிவாசி மக்கள்
x
தினத்தந்தி 10 Feb 2023 6:45 PM GMT (Updated: 10 Feb 2023 6:46 PM GMT)

மாயாற்றை கடக்க வசதியாக கும்கி யானைகள் உதவியுடன் ஆதிவாசி மக்கள் மரப்பாலம் கட்டுகின்றனர்.

நீலகிரி

கூடலூர்

மாயாற்றை கடக்க வசதியாக கும்கி யானைகள் உதவியுடன் ஆதிவாசி மக்கள் மரப்பாலம் கட்டுகின்றனர்.

இரும்பு பாலம் அகற்றம்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் தெப்பகாட்டில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையின் குறுக்கே மாயாற்றை கடக்க ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலம் இருந்தது. ஆனால் மிகவும் பழுதடைந்து இருந்ததால், கடந்த ஆண்டு அந்த பாலம் அகற்றப்பட்டது. அதன்பிறகு புதிய பாலம் கட்டப்படவில்லை.

இதற்கிடையில் மாற்றுப்பாதையாக தெப்பக்காடு வனத்துறை விடுதி வழியாக மசினகுடிக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள தரைப்பாலத்தில் பலத்த மழை பெய்யும்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் அடிக்கடி வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

மரத்துண்டுகளை கொண்டு...

இந்த நிலையில் தெப்பக்காடு பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்களில் பெரும்பாலானவர்கள், முதுமலை புலிகள் காப்பகத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வளர்ப்பு யானைகள் முகாம் உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு மாயார் ஆற்றை கடக்க வேண்டிய நிலை உள்ளது. இல்லையென்றால் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது.

இதன் காரணமாக மாயாற்றின் குறுக்கே கும்கி யானைகள் உதவியுடன் மரப்பாலம் அமைக்கும் பணியில் ஆதிவாசி மக்கள் ஈடுபட்டு உள்ளனர். வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, கரை ஒதுங்கி கிடந்த மரத்துண்டுகளை சேகரித்து பாலம் அமைக்கப்படுகிறது.

விரைவாக சிமெண்டு பாலம்

இதுகுறித்து ஆதிவாசி மக்களுக்கு கூறும்போது, மாயாற்றை கடக்க புதிய பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனால் அந்த பணி நடைபெறுவது ேபான்று தெரியவில்ைல. இதனால் ஆற்றில் அடித்து வரப்பட்ட மரத்துண்டுகளை கொண்டு கும்கி யானைகள் உதவியுடன் மரப்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம்.

இந்த பாலமும் எவ்வளவு நாட்கள் தாக்குப்பிடிக்கும் என்பது தெரியவில்லை. எனவே விரைவாக சிமெண்டு பாலம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story